திங்கள், 16 அக்டோபர், 2017

டெங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் செல்போனில் விளையாடிய அதிகாரிகள்! October 16, 2017

டெங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் செல்போனில் விளையாடிய அதிகாரிகள்!


டெங்கு தடுப்பு நடவடிக்கை தொடர்பான மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைக் கூட்டத்தில், செல்போனில் கவனம் செலுத்திய அதிகாரிகளின் செயல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் வினய், காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

அப்போது, ஆலோசனைக் கூட்டத்தை கவனிக்காமல், சில அதிகாரிகள் செல்போனில் பேசிக்கொண்டும், வீடியோ மற்றும் வாட்சப் பார்த்துக் கொண்டும் இருந்தனர்.  


காய்ச்சல் காரணமாக பலர் உயிரிழந்து கொண்டிருக்கும் நேரத்தில் தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், அதிகாரிகள் அலட்சியத்துடன் நடந்து கொண்டது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.