ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

கீழடியில் கிடைத்திருப்பது வெறும் வால் பகுதி மட்டுமே: சு.வெங்கடேசன்

Image
கீழடியை பொறுத்தவரை 20 ஆண்டுகளுக்கு மேல் அகழாய்வு செய்தால்தான், அதன் முழுமையை தெரிந்து கொள்ள முடியும் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். 
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் அகழ்வாராய்ச்சி நடந்துவருகிறது. ஐந்தாம் கட்ட அகழாய்வில் பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மண் மூடிகள், சுவர்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில், அகழாய்வு செய்யப்பட்ட இடங்களை மதுரை எம்பி சு.வெங்கடேசன், பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கீழடியில் கிடைத்திருப்பது வெறும் வால் பகுதி மட்டுமே என்றும், தலை பகுதி வேண்டும் எனில் தொடர்ந்து அகழாய்வு நடந்தால் மட்டுமே இவை சாத்தியமாகும் என்றும் தெரிவித்தார். 
தமிழக அரசு போதிய நிதியை ஒதுக்கி, கீழடி மட்டுமின்றி அதன் சுற்றுப் பகுதிகளான மணலூர், கொந்தகை, பசியாபுரம் போன்ற பகுதிகளிலும் தொடர் அகழாய்வில் ஈடுபட வேண்டும் என்றும் சு.வெங்கடேசன் வலியுறுத்தினார். 
credit ns7.tv