ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

ஒரே நாளில் 540 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது zomato!

Image
ஆன்லைன் மூலம் உணவு விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள zomato நிறுவனம் இன்று ஒரே நாளில் 540 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
குருகிராமில் உள்ள zomato நிறுவனத்தின் தலைமையகத்தில் பணியாற்றிவந்த வாடிக்கையாளர் சேவை, வணிகர் மற்றும் விநியோக கூட்டாளர் ஆதரவு பிரிவில் பணிபுரிந்த 540 ஊழியர்களை நீக்கம் செய்துள்ளது. பின்புலத்தில் இருந்து பணியாற்றும் சேவைப் பிரிவு ஊழியர்களை குறைத்துக்கொள்ளும் நோக்கில் இந்த பணி நீக்கங்கள் நடைபெற்றுவருவதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதமும் இதே போன்ற 60 பேரை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்தது நினைவுகூறத்தக்கது.
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 2 முதல் 4 மாதங்களுக்கு சம்பளத்தொகை வழங்கப்படும் என்றும் ஜனவரி 2020 வரை இன்சூரன்ஸ் வழங்கப்படும் என்றும் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி “எங்கள் நிறுவனத்தின் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் ஊழியர்களின் பணியை தொழில்நுட்பம் ஈடுகட்டும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, தற்போது 7.5% அளவிற்கு மட்டுமான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே ஊழியர்கள் மூலம் சேவை வழங்கும் தேவை உள்ளது. இது கடந்த மார்ச்சில் 15% ஆக இருந்தது.
தற்சமயம் பணிநீக்கம் செய்யப்பட்ட 540 ஊழியர்கள் என்பது அந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 10% என்பது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv