சேலம்-சென்னை ரயிலில் 5 கோடியே 78 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளையர்கள் குறித்து தகவல் அளித்தால் அவர்களுக்கு 2 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என காவல்துறையும் சி.பி.சி.ஐ.டியும் இணைந்து அறிவித்துள்ளன.
கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8ம் தேதி சேலத்திலிருந்து சென்னைக்கு பலத்த பாதுகாப்புடன் 332 கோடி ரூபாய் கொண்டு வரப்பட்டது. இதில் நடுவழியில் ரயிலின் மேற்கூரையை பிரித்து இறங்கிய மர்ம கொள்ளையர்கள் 5 கோடியே 78 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்கு மாற்றப்பட்டது.
இருப்பினும், வழக்கில் எந்த ஒரு முன்னேற்றம் ஏற்படவில்லை. சிபிசிஐடியில் அதிகாரிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்ப்பட்டது.
இந்நிலையில் ரயிலில் கொள்ளையடித்தவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 2 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக அளிக்கப்படும் என சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. கொள்ளையர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் 044-28511600 என்ற தொலைபேசி எண்ணுக்கோ அல்லது 9940022422 அல்லது 9940033233 என்ற எண்களுக்கோ அழைத்து தகவல் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது.