சனி, 23 டிசம்பர், 2017

2017ல் மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்பட்ட உணவு எது தெரியுமா? December 23, 2017

Image


சிக்கன் பிரியாணியை விருப்பமான உணவாக சொல்லாத அசைவ உணவு விரும்பிகள் இருக்க மாட்டார்கள். பிரபல உணவு போர்ட்டலான ஸ்விக்கி(Swiggy) நிறுவனத்தின் மூலம்  மும்பை, டெல்லி, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு,புனே மற்றும் கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி, 2017 இல் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவின் பட்டியலில் சிக்கன் பிரியாணி முதல் இடத்தை பெற்றுள்ளது.

சிக்கன் பிரியாணியை தொடர்ந்து மசாலா தோசை, பட்டர் நாண், தந்தூரி ரொட்டி மற்றும் பன்னீர் பட்டர் மசாலா முதலிய உணவு வகைகள் முதல் ஐந்து இடத்தை பெற்றுள்ளன.

துரித உணவான பிட்சா, முதல் ஐந்து இடத்தை பெறவில்லை என்றாலும், அதிகம் தேடப்பட்ட உணவாக இருக்கிறது. மேலும், பாவ் பஜ்ஜி, சமோசா, பேல் பூரி, சிக்கன் பர்கர், பிரஞ்சு பிரை மற்றும் சிக்கன் ரோல் முதலியவை அதிகம் உண்ணப்பட்ட நொறுக்குத்தீனிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.