வெள்ளி, 22 டிசம்பர், 2017

தக்காளி விலை கடும் வீழ்ச்சி - விவசாயிகள் வேதனை! December 22, 2017

Image

ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ தக்காளியின் விலை 5 ரூபாய்க்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. 

சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான தலைவாசல், சிறுவாச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். 

கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக தக்காள் நல்ல விளைச்சல் கண்டுள்ளது. இதனால் தலைவாசல் தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. 

இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ஒன்று 5 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. 

விற்பனை விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.