செவ்வாய், 19 டிசம்பர், 2017

குஜராத் தேர்தலில் எந்த கட்சி எவ்வளவு வாக்குகள் பெற்றுள்ளன? December 19, 2017

குஜராத் தேர்தலில் ஒவ்வொரு கட்சிக்கு கிடைத்த வாக்கு சதவீதத்தை தற்போது காண்போம். 

99 இடங்களில் வென்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ள பாஜகவிற்கு 49.1 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அந்தக் கட்சிக்கு மொத்தம் ஒரு கோடியே 47 லட்சத்து 24 ஆயிரத்து 427 வாக்குகள் கிடைத்துள்ளன.

பாஜக கடந்த 2012 சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதமான 48 சதவீதத்தைவிட தற்போது 1.1 சதவீதம் அதிகம் பெற்றுள்ளது. அதே நேரம் 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 60 சதவீத வாக்குகளை பெற்ற பாஜக தற்போது 49.1 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது. 

77 இடங்களில் வென்றுள்ள காங்கிரஸ் கட்சி  41.4 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அந்தக் கட்சிக்கு ஒரு கோடியே 24 லட்சத்து 38 ஆயிரத்து 937 பேர் வாக்களித்துள்ளனர். 

2012 சட்டமன்றத் தேர்தலில் 39 சதவீத வாக்குகளை பெற்ற காங்கிரஸ் 2017 சட்டமன்றத் தேர்தலில் அதைவிட 2.4 சதவீத வாக்குகளை அதிகம் பெற்றுள்ளது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் 33 சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் தற்போது அதைவிட கூடுதலாக 8.4 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. 

குஜராத் தேர்தலில் சுயேட்சைகளாக போட்டியிட்டவர்களின் மொத்த வாக்கு சதவீதம் 4.3 ஆகும். 12 லட்சத்து 90 ஆயிரத்து 278 பேர் சுயேட்சை வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர்.  

குஜராத்தில் நோட்டாவிற்கு 4வது இடம் கிடைத்துள்ளது. எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று தெரிவிக்க நோட்டாவுக்கு வாக்களித்தவர்களின் சதவீதம் 1.8 ஆகும். அதாவது 5 லட்சத்து 51 ஆயிரத்து 615 பேர் நோட்டாவிற்கு வாக்களித்துள்ளனர்.