ஞாயிறு, 31 டிசம்பர், 2017

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு சீமான் கடும் எதிர்ப்பு! December 31, 2017

Image

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், அரசியலில் குதித்துள்ள ரஜினிகாந்த் திரைப்படங்களில் நடிப்பதில் சிக்கல் இல்லை என்றும், அரசியலுக்கு வந்தால் ஏற்க முடியாது என்றும், அதனை தாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என்றும் தெரிவித்தார். 

தமிழன் என ரஜினிகாந்த் ஏன் சொல்கிறார்? ஏன் இனம் மாறுகிறார்? என்று கேள்வி எழுப்பிய சீமான், மன்னராட்சி காலத்தில் மராட்டியர் படையெடுத்து வந்ததாகவும், தற்போது படமெடுத்து வருகின்றனர் என்றும் காட்டமாக தெரிவித்தார்.

ரஜினிகாந்த் வந்து ஆட்சி செய்தால் பிற மாநிலத்தவர்கள் காறித்துப்புவார்கள் என்று விமர்சித்த சீமான், ஒரே நாளில் கட்சியைத் தொடங்கி ஆட்சியை பிடிப்பதெல்லாம் இனி நடக்காது என்று கருத்து தெரிவித்தார்.

ஆன்மீக அரசியல் என்பது புதிய அரசியல் கருத்தாக இருப்பதாக கேலியாக தெரிவித்த அவர், அது எப்படிதான் இருக்கிறது என பார்ப்போமே என்று கிண்டலாக தெரிவித்தார்.

Related Posts: