செவ்வாய், 26 டிசம்பர், 2017

லத்தியைப்பிடுங்கி காவலரின் மண்டையை உடைத்த மாணவர்கள் December 26, 2017

சென்னை பெசன்ட் நகரில், பைக் ரேசில் ஈடுபட்டவர்கள், தங்களைப் பிடிக்க முயன்ற போலீஸாரின் லத்தியைப்பிடுங்கி, காவலரின் மண்டையை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அடையாறு பெசன்ட் அவென்யூ அருகே நேற்றிரவு, சாஸ்திரி நகர் போலீஸார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக பைக் ரேசில் ஈடுபட்டர்களை தடுத்த நிறுத்த போலீஸார் முயன்றுள்ளனர். இருப்பினும், அவர்கள், வாகனத்தில் நிற்காமல் செல்லவே, தலைமைக் காவலர் குணசேகரன், இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது லத்தியால் அடித்ததாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து, அங்கிருந்து தப்பிச்சென்ற 3 பேர், தனது நண்பர்களை அழைத்து வந்து, தலைமை காவலர் குணசேகரனை, லத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதைத் தடுக்க வந்த காவலர் அசோக்குமாரையும், அவர்கள் தாக்கி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற போலீஸார், தலையில் படுகாயம் அடைந்த தலைமை காவலரை மீட்டு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், அமைந்தகரையைச் சேர்ந்த சண்முகம், சந்திரகுமார், சூளைமேட்டைச் சேர்ந்த ஜான், அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஷேக் ஆதில் ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர், அவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீஸார், 4 பேரையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

Image