வியாழன், 28 டிசம்பர், 2017

பயிர்களை யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை! December 28, 2017

Image

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெல் வயலில் புகுந்த காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுயானைகள், காட்டுமாடுகள், மான்கள், சிறுத்தை, புலி என ஏராளமான வன விலங்குகள் காணப்படுகின்றன.  விலங்குகளுக்கு வேண்டிய குடிநீர்,  உணவுத்தேவை, மலையடிவாரப் பகுதியில் செழிப்பாக உள்ளதால் வனவிலங்குகள் இடம்பெயர மனமின்றி இங்கேயே தங்கியுள்ளன.

சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தற்போது நன்கு வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், வயல்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் ஒரு ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை நாசம் செய்தன. இதனால், பெருமளவு இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

காட்டு யானைகள் வயல்வெளிகளுக்குள் நுழையாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.