நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
அதில், நடப்பு கொள்முதல் பருவத்திற்கு நெல்லிற்கான குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகத்திற்கு 1,590 ரூபாயும், பொது ரகத்திற்கு 1,550 ரூபாயும் மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
விவசாயிகளின் நலன் கருதி ஊக்கத்தொகையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகத்திற்கு 70 ரூபாயும், பொது ரகத்திற்கு 50 ரூபாயும் கூடுதலாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதன்படி, நெல் குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகத்திற்கு 1,660 ரூபாயும், பொது ரகத்திற்கு 1,600 ரூபாயும் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1,564 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கவும், 20 லட்சம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.