வெள்ளி, 22 டிசம்பர், 2017

முதன் முறையாக ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம்! December 22, 2017

Image


முதன் முறையாக ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் நடைபெறுகிறது.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவரகாக ராகுல் காந்தி கடந்த 11ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பிறகு நடைபெற்ற குஜராத் மற்றும் ஹிமாச்சலபிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது. எனினும் தொகுதி எண்ணிக்கை மற்றும் வாக்கு சதவீத அடிப்படையில் காங்கிரஸ் கட்சி சற்று உயர்வை சந்தித்தது. இதற்கு ராகுல் காந்தி குஜராத்தில் மேற்கொண்ட கூட்டணி யுக்தி மற்றும் பரப்புரையே காரணம் எனக் கூறப்பட்டது. 

அதுமட்டுமின்றி 2ஜி முறைகேடு புகார் வழக்கின் தீர்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் ராகுல் காந்தி தலைவராக பொறுப்பேற்ற பிறகு இன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் குஜராத், ஹிமாச்சல் பிரதேச தேர்தல் முடிவுகள் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.