உடுமலை திருமூர்த்தி மலை அணையில், வன விலங்குகள் அழுகிய நிலையில் மிதந்து காணப்படுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பரம்பிகுளம் அணையிலிருந்து காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு உடுமலை திருமூர்த்தி அணையில் நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் அணையின் ஓரத்தில் கடமான் ,காட்டெருமை, காட்டு பன்றி போன்ற வனவிலங்குகள் இறந்து அழுகிய நிலையில் மிதந்து காணப்படுகிறது.
இது குறித்து தகவல் தெரிவித்தும் கண்டுகொள்ளாமல் அணையை பராமரிக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியப் போக்கோடு செயல்பட்டு வருவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.