மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்ட தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்ய தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார்.
இந்த வீடியோ தொடர்பாக ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி புகார் அளித்த பின் டி.டி.வி. ஆதரவாளர் வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
126(பி) சட்ட விதிப்படி வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக வெற்றிவேல் வெளியிட்டுள்ள வீடியோ ஒளிபரப்பை ஊடகங்கள் நிறுத்தவேண்டும் என்றும் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.