நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நீதிபதி கர்ணன், இன்று விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து கடந்த மே மாதம் விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதையடுத்து, தலைமறைவான நீதிபதி கர்ணன், 40 நாட்களுக்கு பிறகு ஜூன் மாதம் 20-ம் தேதி கோவையில் கைது செய்யப்பட்டார். அவரை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரியும், அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை ரத்து செய்யக்கோரியும் அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி சிறைச்சாலையில் நிதிபதி கர்ணன் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நீதிபதி கர்ணனின் 6 மாத தண்டனைக் காலம் முடிவடைந்ததையடுத்து, அவர் இன்று விடுதலை செய்யப்படவுள்ளார்.