செவ்வாய், 19 டிசம்பர், 2017

நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக அளவு பணம் செலவு செய்த தேர்தல் ஆணையம்! December 19, 2017

Image

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்துவதற்காக தற்போது வரை சுமார் 3 கோடி ரூபாய் வரை செலவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான தொகை செலவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

ஆர்.கே. நகர் தொகுதியில் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. இதனையொட்டி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சி சார்ந்த பிரமுகர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கக் கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவின் போது மூவாயிரத்து 300 காவலர்கள் பணியாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தேர்தலை நடத்துவதற்காக இதுவரை சுமார் 3 கோடி ரூபாய் வரை செலவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதிகளவில் சிசிடிவி கேமராக்கள், துணை ராணுவப் படையினர் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கே இந்த அளவு செலவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்றால் சுமார் 75 லட்சம் ரூபாயே செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. நிர்ணயிக்கப்பட்டதை விட நான்கு மடங்கு அதிக அளவு பணத்தை தேர்தல் ஆணையம் செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.