புதன், 27 டிசம்பர், 2017

தொடரும் பட்டாசு தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்! December 27, 2017

Image

சிவகாசி பட்டாசு ஆலைகளின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தால் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். 

சிவகாசி மற்றும் சுற்றுப் பகுதிகளில் 900-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. பட்டாசு தொழில் மற்றும் அதன் சார்பு தொழிலை நம்பி சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். 

இந்நிலையில், மத்திய அரசின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த மசோதாவில் இருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு கோரியும், பட்டாசு தொழிற்சாலை சங்கங்கள் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது. 

மேலும், பட்டாசுக்கு தடைக் கோரி தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால், பட்டாசு விநியோகஸ்தர்கள் பட்டாசுகளை வாங்க தயங்குவதாகவும் கூறப்படுகிறது. எனவே, வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இரண்டாவது நாளாக தொடரும் வேலை நிறுத்தப் போராட்டத்தால், 10 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.