பிட்காயினில் முதலீடு செய்து பணத்தை இழக்க வேண்டாம் என சிறு முதலீட்டாளர்களுக்கு நிதியமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிட்காய்ன் எனப்படும் விர்ச்சுவல் பணத்தின் பயன்பாடு இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த பணத்திற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது என்றும், இதற்கு ஈடான சொத்துக்களும் இல்லை என்றும்
தெரிவித்துள்ள நிதி அமைச்சகம், அனுமானத்தின் அடிப்படையிலேயே இந்த பணப்புழக்கம் இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய பிட்காயினில் முதலீடு செய்வது மிகப் பெரிய ஆபத்து என கூறியுள்ள நிதி அமைச்சகம், எனவே, முதலீட்டாளர்கள் யாரும் இதில் முதலீடு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.