செவ்வாய், 26 டிசம்பர், 2017

ஆர்.கே.நகரில் பாஜகவின் தோல்வியை கிண்டல் செய்து ஜிக்னேஷ் மேவானி Tweet! December 25, 2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜகவின் படுதோல்வி குறித்து கிண்டல் செய்து சமூக செயற்பாட்டாளரும், குஜராத் வட்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜிக்னேஷ் மேவானி கருத்து தெரிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று (டிசம்பர் 24) எண்ணப்பட்டன. இதில், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று, 40,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று சாதனை படைத்தார்.

தினகரனை எதிர்த்து களம் கண்டோரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனை தவிர்த்து, திமுக வேட்பாளர் மருதுகணேஷ், பாஜக வேட்பாளர் கரு நாகராஜன், நாம் தமிழர் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட 57 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். 

1.80 லட்சம் வாக்குகள் பதிவான இத்தேர்தலில், பாஜக வேட்பாளர் கரு நாகராஜன் வெறும் 1,417 வாக்குகள் மட்டுமே பெற்றார். எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை எனும் நோட்டாவுக்கு 2,373 வாக்குகள் கிடைத்தன. இது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளானது.

இது குறித்து, பிரபல சமூக செயற்பாட்டாளரும், சமீபத்தில் குஜராத் வட்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான ஜிக்னேஷ் மேவானி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
Image
 
World's biggest missed call party - who received more than 50 lakhs missed call in TN but received only 1417 votes which is less than 2373 Nota votes, Hope they can digest Uttapam with TN toppings. 

“உலகின் மிகப்பெரிய “மிஸ்டு கால்” கட்சிக்கு தமிழ்நாட்டில் இருந்து 50 லட்சத்திற்கும் அதிகமான மிஸ்டு கால்கள் வந்திருந்த நிலையில், தேர்தலில் வெறும் 1,417 வாக்குகளையே பெற்றுள்ளது. இது நோட்டாவை விட குறைவான வாக்குகள். தமிழகத்தின் மசாலாக்கள் தூவப்பட்டு செய்யப்பட்ட ஊத்தாப்பம் அவர்களுக்கு செரிக்கும் என்று நான் நம்புகிறேன்!” என்று ட்விட்டரில் பாஜகவை கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டுள்ளார். இதை ஆயிரக்கணக்கானோர் Retweet செய்துள்ளனர்.