சனி, 30 டிசம்பர், 2017

பாஜகவின் கிளைக்கட்சியாகவே அதிமுகவை மாற்றி விட்டனர் - மு.க.ஸ்டாலின் December 30, 2017

பாஜகவின் கிளைக்கட்சியாக தமிழகத்தில் ஆளும் அதிமுக திகழ்வதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்வதை நம்புவதற்குத் தமிழக மக்கள் தயாராக இல்லை என குறிப்பிட்டுள்ளார். 

தமிழகத்தில் ஏற்படும் இயற்கை பேரிடர்களில் தொடங்கி அடிப்படை உரிமைகளுக்கு குரல் கொடுக்காமல் அஞ்சுவதுடன், தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பாஜகவின் கிளைக்கட்சியாகவே அதிமுகவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மாற்றி விட்டதாக விமர்சித்துள்ளார். 

அனைத்து நிலைகளிலும் தமிழ்நாடு பின்னடைவைச் சந்தித்து, பெரும் கடன்சுமையில் தத்தளிக்கும் நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற முதல்வர் பழனிசாமியின் பசப்பு வார்த்தைகளை மக்கள் நம்ப மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
source: http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/30/12/2017/ops-eps-made-admk-bjps-supplementary-party-says-mkstalin

Related Posts: