புதன், 20 டிசம்பர், 2017

ப.சிதம்பரத்தின் யோசனைக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆதரவு! December 20, 2017

Image

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி கட்டமைப்பில் சேர்க்கும் யோசனைக்கு, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் இருந்து, பெட்ரோலிய பொருட்களுக்கும், மது வகைகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநிலங்களவையில் பேசிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தற்போது, 19 மாநிலங்களில், பா.ஜ. ஆட்சி அமைந்துள்ள சூழ்நிலையில், ஜி.எஸ்.டி., வரம்புக்குள், பெட்ரோலிய பொருட்களை சேர்ப்பதற்கு, மத்திய அரசு தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இந்த விஷயத்தில், மாநில அரசுகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும் என்றார். ஜி.எஸ்.டி., வரம்பில், பெட்ரோலிய பொருட்களை சேர்க்க விரைவில் மாநில அரசுகள் ஒப்புக் கொள்ளும் என நம்புவதாக கூறிய அவர், ஜி.எஸ்.டி.,க்குள், பெட்ரோலிய பொருட்களை சேர்க்கும் யோசனையை தாம் ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.