
கடந்த வாரம் அண்ணா பல்கலைகழகம் 2017-18-ஆம் கல்வி ஆண்டின் பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்ச்சி பட்டியிலை வெளியிட்டது. அதில்,முதலாம் ஆண்டு தேர்வில் 43 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை எனவும், 143 பொறியியல் கல்லூரிகளில் 10 % குறைவான மாணவர்களே தேர்ச்சி எனவும் அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது. மேலும், 409 கல்லூரிகளில் 50 % குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர் .
இந்த தேர்ச்சி விகிதம் தமிழ்நாட்டில் உள்ள பொறியில் கல்லூரியின் தரத்தை பற்றிய கேள்வியை நம் முன்னே எழுப்புகிறது. அண்ணா பல்கலைகழங்களுடன் இணைந்த 466 பொறியியல் கல்லூரியில் 57 கல்லூரி மட்டுமே 50% தேர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது.தன்னாட்சி பெற்ற பொறியியல் கல்லூரிகளின் முதலாம் ஆண்டு தேர்வுகள் அண்ணா பல்கலைகழகத்தின் கட்டுபாட்டுக்குகள் வருவதில்லை என்பது குறிப்பிடதக்கது.
மேலும்,இது பற்றி கல்வியாளர்கள் கூறுகையில், ‘ 12-ஆம் வகுப்பிற்கு மாணவர்கள் புளூ பிரிண்டை மனப்படம் செய்து தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனால், அந்த முறையில் பயின்று பொறியியல் படிப்புகளில் தேர்ச்சி பெற இயலாது. மேலும், பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தரம் மிகவும் மோசமாக உள்ளதும் இவ்வளவு மோசமான தேர்ச்சி விகிதத்திற்கு காரணம் என கூறுகிறார்கள்.
புளுபிரிண்ட்டை மனப்பாடம் செய்து தேர்வை அணுகும் முறை மேலும் தொடரமால் பார்த்து கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். தமிழகத்தில் 530 பொறியியல் கல்லூரிகள் இருக்கிறது. ஆனால் தமிழகத்திற்கு 200 பொறியியல் கல்லூரிகளயே போதுமானது. மீதம் உள்ள 300-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் முடப்பட வேண்டியவை என்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தனியாக பணம் கட்டி, மதிப்பெண் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க உள்ளனர். மறு கூட்டலுக்கு பின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.