
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தி திட்டமிட்டபடி நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என திமுகவினர் தெரிவித்துள்ளனர்.
கூடங்குளத்தில் 2 அணு உலைகள் இயங்கி வருகிறது. 3 மற்றும் 4வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அணுமின் நிலையம் அமைப்பதற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கவில்லை என புகார் எழுந்தது. மேலும், அணுமின் திட்டத்தின் மூலம் வீடுகட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மக்களுக்கு உரிய பணம் கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனை கண்டித்து திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திமுகவினரோடு, அணுமின் நிலைய அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் திட்டமிட்டபடி நாளை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது