திங்கள், 12 பிப்ரவரி, 2018

​சினிமாக்களில் வருவது போன்று அரசு விழாவில் நடைபெற்ற அவலம்! February 11, 2018

தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்ற நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுகளை மீண்டும் திரும்பப் பெற்ற சம்பவம் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

பள்ளிக் கல்விதுறை சார்பாக தேனியில் நடத்தப்பட்ட கலைத் திருவிழாவில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவியரின் பரத நாட்டியம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கண்கவர் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அலுவலர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பள்ளி மாணவர்களுக்கு இடையிலான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழை துணை முதல்வர் ஓ.பி.எஸ். வழங்கினார். 

பரிசுகளை பெற்ற மாணவ, மாணவிகளிடம் இருந்து பரிசுகளை திரும்பப் பெற்றுக் கொண்ட ஆசிரியர்கள், அவற்றை பள்ளிக்கு வந்த பின் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியதாக தெரிகிறது. பள்ளிக் கல்வித்துறை நிகழ்ச்சியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் பெற்றோரை அதிருப்தியடையச் செய்துள்ளது. 

குறைந்த எண்ணிக்கையிலான பரிசுகளை மட்டும் வைத்துக் கொண்டு திரைப்படங்களில் வருவது போன்று அவற்றையே திரும்பத் திரும்ப மாணவர்களுக்கு கொடுத்து ஏமாற்றிய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

Related Posts: