
எந்த ஒரு ஜல்லிகட்டிலும் யார் பிடியிலும் சிக்காத, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளை, களத்தில் வீர மரணம் அடைந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் காளையும் பங்கேற்றது. வாடி வாசலில் அவிழ்த்து விடப்பட்ட காளை, ஆக்ரோஷத்துடன் வெளியே வந்தபோது எதிர்பாரத விதமாக வாடிமரத்தில் மோதி களத்திலேயே மயங்கி விழுந்தது.
உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிறிது நேரத்திலேயே கொம்பன் காளை உயிரிழந்தது.
எந்த ஒரு ஜல்லிக்கட்டு போட்டியிலும் கட்டுக்கடங்காத காளை உயிரிழந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து உயிரிழந்த காளையை அமைச்சர் விஜயபாஸ்கரின் தோட்டத்தில் அடக்கம் செய்தனர். இதனால் அமைச்சர் விஜயபாஸ்கர் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
கொம்பன் பங்கேற்ற அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளிலும், யாருக்கும் கட்டுக்கு அடங்காத காளையாக இருந்துள்ளது.