புதன், 14 பிப்ரவரி, 2018

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் அமைக்க தாமதம் ஏன் - இந்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி! February 14, 2018

Image

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க காலதாமதம் ஆவதற்கான காரணம் குறித்து மத்திய அரசு ஜூன் 14ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் புத்தாண்டு அன்று எந்த இடம் என்பது குறித்து அறிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசு அறிவிக்கவில்லை.

இதனால், மத்திய சுகாதார அமைச்சரவை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத்தரப்பில் மேலும் 3 மாத காலம் கூடுதல் கால அவகாசம் வழங்க கோரப்பட்டது.  இதையடுத்து நீதிபதிகள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க கால தாமதம் ஆவதற்கான காரணம் குறித்து மத்திய அரசு ஜூன்14-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Related Posts: