திருப்பூரில் நியாயவிலைக் கடையில் வழங்கப்படும் அரிசி பிளாஸ்டிக் அரிசியாக இருக்கலாம் என பொதுமக்கள் அளித்த புகாரையடுத்து அங்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
திருப்பூர் சூசையாபுரம் பகுதியை சேர்ந்த ஜெயமேரி, நேற்று அப்பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் அரிசி வாங்கியுள்ளார். பின்னர் அந்த அரிசியை சமைப்பதற்கு தண்ணீரில் போட்டு வேக வைத்தபோது அரிசி தண்ணீரில் மிதந்ததாக கூறப்படுகிறது. உடனே ஜெயமேரி இது குறித்து நியாய விலைகடையில் பணியாற்றும் ஊழியரிடம் கேட்டுள்ளார், அதற்க்கு கடை ஊழியர் வாங்கி சென்ற அரிசியை மாற்ற முடியாது என்று கூறியுள்ளார் . எனவே, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நியாயவிலைக்கடையில் அரிசிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.