தனியார் மருத்துவமனைகளை முறைப்படுத்தும் சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தனியார் மருத்துவமனைகள் தங்களை அரசிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும், மருத்துவமனைகளில் உள்ள வசதிகளை தெரிவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், அரசு மருத்துவமனைக்கும் இந்த சட்டம் பொருந்தும் என அவர் கூறியுள்ளார். அரசிடம் பதிவு செய்ய 9 மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய சட்டத்தின் மூலம் போலி மருத்துவர்களை ஒழிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

