காவிரித் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான அமைப்பை, அதாவது காவிரி மேலாண்மை வாரியத்தை உருவாக்க இன்னும் 6 நாட்களே இருக்கின்றன. டெல்லியில் நீர்வள அமைச்சகத்தின் செயலர் கூட்டிய கூட்டத்தில் நடந்தது என்ன, ஒவ்வொரு மாநிலமும் எடுத்த நிலைப்பாடு என்ன என்பது பற்றி விளக்கப்பட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், "காலத்தின் குரல்" விவாதத்தில் வினவினார்.
இனி வரும் நாட்களில் ஸ்கீம் (தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம்) என்ற சொல் விவாதங்களில் புழங்கும். "ஸ்கீம்" என்பதை காவிரி மேலாண்மை வாரியம் என்றும் அழைக்கலாம் என்று மத்திய அரசின் செயலர் கூறியதையும், இந்த அமைப்பான நிரந்தரமானதாக அமையும் என்பதும் தெளிவுபடுத்தும் வகையிலான ஆவணம் இது. மத்திய அரசின் கூட்டத்தின் முடிவுகள் பற்றிய ஆவணம்.
காவிரி பற்றி ஆழமாக அறிய விரும்பும் நண்பர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இந்தத் தரவு பயன்படக்கூடும் என்பதால் பகிர்கிறேன்.
(குறிப்பு: காவிரி மேலாண்மை வாரியம் என்ற அமைப்பைப் பரிந்துரைத்தது, காவிரி நடுவர் மன்றம். தமிழக அரசோ, தமிழ்நாட்டுத் தலைவர்களோ அல்ல!)