வியாழன், 22 மார்ச், 2018

தீண்டாமை சுவர் விவகாரத்தால் இஸ்லாமிய மதத்திற்கு மாறப்போவதாக தாழ்த்தப்பட்ட மக்கள் அறிவிப்பு! March 22, 2018

Image


சாதி வேறுபாட்டை குறிக்கும் தீண்டாமை சுவரை இடிக்காததால், மதுரை சந்தையூரில் வசிக்கும் அருந்ததியினர் இன கிராம மக்கள் இஸ்லாமிய மதத்திற்கு  மாற உள்ளதாக அறிவித்துள்ளனர். 

மதுரை அருகேயுள்ள சந்தையூரில் உள்ள தீண்டாமை சுவரை இடிக்க வேண்டும் என்று அருந்ததியினனர் இன மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனால் இவர்களின் போராட்டத்திற்கு யாரும் செவிக்கொடுக்காததால் மலை ஏறி 52 நாட்கள் கடும் வெயிலிலும், மழையிலிலும், மிருகங்களுக்கு அஞ்சியும் போராட்டம் நடத்தினர். 

மேலும் தீண்டாமை சுவரை இடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், மதுரை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட நிர்வாகமும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால், இந்து மதத்தில் தங்களுக்கு சுயமரியாதை இல்லை எனக்கூறிய அவர்கள், இஸ்லாமிய மதத்திற்கு 200க்கும் மேற்பட்ட அருந்ததியினர் மாற உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இஸ்லாமிய ஜமாத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்திய நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு பிறகும் சாதிய பெயரால் தீண்டாமை கடைபிடிக்கப்படுவது சமூகத்தின் அவல நிலையை காட்டுகிறது.