திங்கள், 26 மார்ச், 2018

​ஒரு கப் டீயின் விலை இவ்வளவா? - அதிர்ந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர்! March 25, 2018

Image

சென்னை விமான நிலையத்தில் ஒரு டீ மற்றும் காபியின் விலையைக் கேட்டு, தான் அதிர்ந்து போனதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டுவிட் செய்துள்ளார். 

இதுகுறித்து தமது ட்விட்டர் பதிவில், 'சென்னை விமான நிலையத்தில் உள்ள காபி ஷாப் ஒன்றில், டீ ஆர்டர் செய்ததாகவும், சூடான நீர் மற்றும் ஒரு டீ பேக் ஒன்றை வழங்கினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அதன் விலை 135 ரூபாய் என்றும், இதைக் கேட்டவுடன் தாம் அதிர்ந்து போனதாகவும் தெரிவித்துள்ளார்.

அதனால், தாம் ஆர்டர் செய்த டீ வேண்டாம் என மறுத்து, காபியின் விலையை விசாரித்தபோது அதன் விலை 180 ரூபாய் என தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். 
இதனை யார் தான் வாங்குவார்கள் என்று தான் கடைக்காரரிடம் வினவியதாகவும், அதற்கு பலபேர் வாங்கி செல்வதாக பதில் வந்ததாகவும் ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். 
 
At Chennai Airport Coffee Day I asked for tea. Offered hot water and tea bag, price Rs 135. Horrified, I declined. Was I right or wrong?
ப.சிதம்பரம் பதிவிட்ட கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருவதுடன், அதிகளவு பகிர்ந்தும் வருகின்றனர்.