சேலத்தில் வரும் 25-ம் தேதி மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
சேலத்தில் கடந்த 1993-ம் ஆண்டு விமான நிலையம் அமைக்கப்பட்ட நிலையில், மிக குறுகிய காலத்திலேயே விமான சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ், சேலத்தில் மீண்டும் விமான சேவை, வரும் 25ம் தேதி துவங்கப்பட உள்ளது.
இதனையடுத்து, விமான நிலையத்தில், மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆய்வு மேற்கொண்டார்.
விமானம் தரை இறங்கும் இடம், விமானம் புறப்படும் இடம், விமானக் கட்டுப்பாட்டு அலுவலகம் ஆகியவற்றை பார்வையிட்டு, அவற்றின் தயார் நிலை குறித்து, விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் ரோகிணி, சேலத்தில் மீண்டும் விமான சேவையை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துவக்கி வைக்க இருப்பதாகக் குறிப்பிட்டார்.
சேலத்தில் இருந்து சென்னைக்கு 1,499 ரூபாய் கட்டணத்தில், விமான சேவை துவங்க உள்ளதாகவும், ஆட்சியர் ரோகிணி தெரிவித்தார்.