நடராஜன் மறைவுக்கு முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் இரங்கல் தெரிவிக்காதது நாகரீகமற்ற செயல் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வி.கே.சசிகலா கணவர் நடராஜன் உடலுக்கு தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் சீமான் இன்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நடராஜனின் மறைவு தமிழ் சமுதாயத்திற்கு ஈடுகட்ட முடியாத மாபெரும் இழப்பு என வேதனை தெரிவித்தார்.
நடராஜன் உயிரோடு இருக்கும்போதே சசிகலாவுக்கு பரோல் கொடுத்திருந்தால் அவரது கணவரை உயிரோடு ஒருமுறை பார்த்திருக்க முடியும் எனக் கூறிய சீமான், அவரது பரோலுக்கு ஒரு எம்.பி. கூட கையெழுத்திடாதது வேதனையான ஒன்று என தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், நடராசன் உடலுக்கு மரியாதை செய்யும்போது, முதல்வரோ, துணை முதல்வரோ இரங்கல் கூட தெரிவிக்காதது நாகரீகமற்ற செயல் என்றும் சீமான் குறிப்பிட்டார்.