வெள்ளி, 23 மார்ச், 2018

​மாநிலங்களவையில் பெரும்பான்மையை பெறப்போவது யார்? March 23, 2018

Image

17 மாநிலங்களில் மொத்தம் 59 எம்.பிக்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவைத் தேர்தலில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவைக்கு 17 மாநிலங்களில் இருந்து 59 இடங்கள் காலியாக இருந்தன. 

இதில் உத்தரபிரதேசத்தில் 10 இடங்களுக்கும், மகாராஷ்டிராவில் 6 இடங்களுக்கும், பீகாரில் 6 இடங்களுக்கும், மேற்கு வங்கத்தில் 5 இடங்களுக்கும், மத்திபிரதேசத்தில் 5 இடங்களுக்கும், குஜராத்தில் 4 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. 

இதே போல் கர்நாடகாவில் 4 இடங்களுக்கும், தெலுங்கானா, ராஜஸ்தான்,  ஒடிசா, ஆகிய 3 மாநிலங்களில் தலா 3 இடங்களுக்கும் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து 2 எம்.பிக்களைத் தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதே போல் சத்தீஷ்கர், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், கேரளா ஆகிய மாநிலங்களிலிருந்து தலா ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

இந்த 59 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் கிடைக்கப்போகும் முடிவு மாநிலங்களவையில் யார் பெரும்பான்மை பலத்துடன் இருக்கப்போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.