காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் துரோகத்தை, தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டு, புதிய மனு தாக்கல் செய்யப்போவதாக, மத்திய அரசு அறிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கடைந்தெடுத்த மோசடி என்பதற்கு, மத்திய அரசின் இந்த நடவடிக்கையை விட சிறந்த உதாரணம் வேறு எதுவுமில்லை என்றும் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தை மத்திய அரசு ஏமாற்றுகிறது என்பது நன்றாகத் தெரிந்தும், அதற்கு எதிராக வாயைத் திறப்பதற்குக்கூட தமிழக ஆட்சியாளர்கள் தயாராக இல்லை என்றும் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். காவிரிப் பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் கூட்டணி அமைத்துக் கொண்டு இழைத்த துரோகத்தை, தமிழக மக்கள்
மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.