ஞாயிறு, 18 மார்ச், 2018

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பேச்சால் சர்ச்சை! March 17, 2018

ஐன்ஸ்டைனின் E=Mc^2 சூத்திரத்தை விட உயர்ந்த கோட்பாடுகள் வேதங்களில் உள்ளதாக ஸ்டீபன் ஹாக்கிங்கே சொல்லி இருக்கிறார் என அமைச்சர் ஹர்ஸ் வர்தன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்ற 105-வது இந்திய அறிவியல் காங்கிரஸை தொடங்கி வைத்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உரையாற்றினார். “சமீபத்தில் நாம் புகழ்பெற்ற விஞ்ஞானியும், வானியல் அறிஞருமான ஸ்டீபன் ஹாங்கிங்கை இழந்துள்ளோம். ஐன்ஸ்டைனின் E=Mc^2 சூத்திரத்தை விட உயர்ந்த கோட்பாடுகள் வேதங்களில் உள்ளதாக ஸ்டீபன் ஹாங்கிங் உறுதிபட தெரிவித்தவர்” என ஹர்ஷ் வர்தன் உரையாற்றினார்.

ஸ்டீபன் ஹாக்கிங் அவ்வாறு கூறியதாக எவ்வித பதிவுகளும் இல்லாத நிலையில், எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இவ்வாறு பேசுகிறீர்கள் என ஹர்ஷ் வர்தனிடன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, “ஆதாரத்தை நீங்கள்தான் தேட வேண்டும். வேதங்களில் ஐன்ஸ்டைனின் தத்துவங்களை விட உயர்த்த கருத்துகள் உள்ளதாக ஸ்டீபன் ஹாக்கிங் பதிவு செய்துள்ளார். இதை அறிய நீங்களும் சிறிது வேலை செய்ய வேண்டும்” என அமைச்சர் குறிப்பிட்டார்.

மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சை அடுத்து, ஸ்டீபன் ஹாக்கிங் உண்மையிலேயே அப்படி கூறியுள்ளாரா என அறிய ஏராளமானோர் இணையத்தில் தேடத் தொடங்கியதால் Vedas எனும் ஹாஷ்டேக் இணையத்தில் வைரலாகத் தொடங்கியது.



இதனிடையே, ஸ்டீபன் ஹாக்கிங் பெயரில் முகநூலில் உள்ள போலி கணக்கு ஒன்றில் இருந்து கடந்த 2011ம் ஆண்டு இத்தகைய பொய்யான தகவலுடன் பதிவொன்று இடப்பட்டுள்ளதை கண்டெடுத்துள்ள இணையவாசிகள் அதனை பரவலாக பகிர்ந்து வருகின்றனர். 

Image