செவ்வாய், 20 மார்ச், 2018

​புதுக்கோட்டையில் பெரியாரின் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு! March 20, 2018

Image

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே தந்தை பெரியாரின் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் சிலை ஒன்று மர்ம நபர்களால் நேற்றிரவு கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. அவருடைய சிலையில், பெரியார் தலைப்பகுதி முழுவதுமாக உடைக்கப்பட்டிருந்தது. இச்சம்பவத்தை கண்டித்து, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, சிலையில் துண்டிக்கப்பட்ட தலைப்பகுதி மீண்டும் ஒட்டப்பட்டது. சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

பெரியாரின் சிலை உடைக்கப்பட்டதற்கு திராவிட இயக்கத் தலைவர்கள் கி.வீரமணி, மு.க. ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திமுக எம்.பி. கனிமொழி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகிய அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக தான் காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Posts:

  • இஸ்ஸாமிய இயக்க தலைவர்களே ! கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ராஜீவ் கொலை வழக்கு சிறைவாசிகளை விடுதலை கோரி ஒட்டுமொத்த தமிழகமும் சென்னையில் அதுபோல் கடந்த 20ஆண்டுகளாக சிறை… Read More
  • Hadis சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது: நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமைய… Read More
  • "சொந்த வரலாற்றை மறந்த சமுதாயம் வரலாறை படைக்க இயலாது' "சொந்த வரலாற்றை மறந்த சமுதாயம் வரலாறை படைக்க இயலாது' இது அமெரிக்க கறுப்பு நிறத்தவர்களுக்கு மட்டுமல்ல ஆக்கிரமிப்பிற்கும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட… Read More
  • Missing திருச்சி அரியமங்கலம் சிவகாமி அம்மையார் தெருவைச் சேர்ந்தவர் காதர் மைதீன். இவரது மகன் கமர் (எ) ஷாஹின்ஷா . இவர் தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியில் 10 ம்… Read More
  • ஹிந்து இளைஞர்களுக்கு ஆண்மை குறைவு!!? - பிரவின் தொகடியா பேச்சு ஹிந்து இளைஞர்களின் 'ஆண்மை சக்தி'யை அதிகரிக்க 'லேகியம்' கொடுப்போம்: ரூ.600 அடக்க விலை கொண்ட 'செக்ஸ்' மருந்து ரூ.500-க்கு வழங்கப்படும்..! -பிரவ… Read More