வியாழன், 22 மார்ச், 2018

அமெரிக்க நகரங்களை கடுமையாக தாக்கிய பனிப்புயல்! March 22, 2018

Image

அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிமழை பொழிந்து வருவதால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இதன்காரணமாக அங்குள்ள மரங்கள், சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது வெள்ளை போர்வை போர்த்தியவாறு பனிக்கட்டிகள் காணப்படுகின்றன. 

சாலைகளில் தேங்கும் பனிக்கட்டிகளை, உடனுக்கு உடன் அகற்றும் பணியும் நடைபெற்று வருகின்றன. 

பனிப்புயல் காரணமாக 4,000 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பனிப்புயல் வீசும் என எதிர்பார்க்கப்படுவதால் புதன்கிழமை நடைபெற இருந்த அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்வதாக வெள்ளை மாளிகை அறிவித்தது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே வாஷிங்டன் சாலைகளில் தேங்கும் பனிக்கட்டிகளை இளைஞர்கள் சிலர் ஒருவர் மீது ஒருவர் வீசி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நியூயார்க், நியூ ஜெர்ஸி, வாஷிங்டன், விர்ஜினியா, பாஸ்டன் போன்ற நகரங்கள் பனிப்புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.