புதிய தலைமுறையில் சென்னையில் இறைச்சிக்கடைகளில் பூனைக்கறி விற்பது பற்றி ஒரு நிகழ்ச்சி ஓடுகிறது.. இதுபோன்ற புரளிகளை யார் கிளப்பி விடுகிறார்கள் என்று தெரியவில்லை. இப்போது சென்னையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் இறைச்சி விற்பனையில் இறங்கியுள்ளார்கள். அமெரிக்க\ வால்மார்ட் போன்ற கடைகளில் இறைச்சியை பதப்படுத்தி விற்பார்கள். ஆனால் இந்தியா போன்ற சீதோஷ்ண நாடுகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை விற்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. அதனால்தான் இங்கு காய்கறிகளையும், இறைச்சியையும் அன்றன்று நேரடியாக கடைகளுக்கு சென்று வாங்கி பயன்படுத்துகிறோம். நீலகிரிஸ் கடைகளில் பதப்படுத்திய இறைச்சியை விற்றார்கள். பிறகு ரிலையன்ஸ் மீன் கடை வந்தது. ஆனால் பெரியளவில் வணிகம் நடக்கவில்லை. இப்போது டெண்டர் கட்ஸ் கடையை ஓரளவு வெற்றிகரமாக நடத்துகிறார்கள். இறைச்சிக்கடைகளில் எழுபது சதவீத கடைகளை இஸ்லாமியர்கள் நடத்துகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு பிஜேபி அரசு இறைச்சிக்கடைகளை முறைப்படுத்த வேண்டுமென்று ஓர் அறிக்கை வெளியிட்டது. ஆனால் நடைமுறை சாத்தியமில்லை என்று பிறகு அதை பற்றி பேசுவதில்லை. முதலில் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்பார்கள். பிறகு ஆட்டுக்கறியில் பூனைக்கறி கலந்துள்ளது என்பார்கள். பிறகு நாங்களே இறைச்சியை விற்கிறோம் என்பார்கள். பிறகு அந்த வேலையை தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடுவார்கள். வாட்ஸப் வசந்தி க்ரூப்பின் பழைய வரலாற்றை அவர்கள் பாரம்பரியத்தை பார்த்தாலே நமக்கு தெரிந்துவிடும். இதுபோன்ற பூனைக்கறி வதந்தி பின்னால் யார் இருக்கிறார்கள் என்று.
Vinayaga Murugan
Vinayaga Murugan