சென்னை மதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மூலக்கொத்தளம் பகுதி பொதுமக்களை, மதிமுகவினர் விரட்டியடித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மூலக்கொத்தளம் பகுதியை சேர்ந்த மக்களுக்கு, அப்பகுதியில் உள்ள இடுகாட்டின் அருகே குடியிருப்புகள் கட்டித்தருவதாக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மூலக்கொத்தளம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அங்கு தலைவர்களின் நினைவிடம் இருப்பதால், அங்கு குடியிருப்பு கட்டக்கூடாது என தெரிவித்தார்.
வைகோவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், எழுப்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமாக தாயகத்தை முற்றுகையிட முயன்றனர்.
அவர்களை மதிமுகவினர் கட்டைகளை கொண்டு தாக்கி, விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.