ஞாயிறு, 18 மார்ச், 2018

அரசு நிலத்தை விற்பனை செய்ய ஒப்புதல் வழங்கிய பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகம் March 16, 2018

Image

உடுமலையில் அரசு அலுவலகம் அமைந்த இடத்தை விற்பனை செய்வதற்கு, பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகம் ஒப்புதல் வழங்கி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரசு அமல்படுத்தி உள்ள ஆன்லைன் பத்திர பதிவில், பல குளறுபடிகள் உள்ளதாக, ஆவண எழுத்தாளர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்த குற்றச்சாட்டை உடுமலையை சேர்ந்த சிவசங்கர் என்ற ஆவண எழுத்தாளர் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார். 

அதன்படி இவர், உடுமலை சார்பதிவு அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், குற்றவியல் நீதிமன்ற கிளை, சிறைச்சாலை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள நிலத்தை விற்பனை செய்வதாகக் கூறி, பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆன்லைனில் விண்ணப்பத்துள்ளார். 

விண்ணபித்த ஒரே நாளில் அரசு நிலத்தை கிரையம் செய்து கொள்ள, அவருக்கு பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது. இச்சம்பவம் பொதுமக்களிடையேயும், சமூக ஆர்வலர்கள் இடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

உடுமலையில் உள்ள இடத்தை கிரையம் செய்ய, பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகம் எப்படி ஒப்புதல் வழங்கியது என சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆவணங்களை சரி பார்க்காமல் அரசு அதிகாரிகள் அனுமதி வழங்குவதாகவும் அவர் குற்றச்சாட்டியுள்ளார்.