உலக தண்ணீர் தினம் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில் சேலம் மாவட்டம் வீரகனூர் உள்ள கிராம மக்கள் உப்புத்தன்மை வாய்ந்த நிலத்தடி நீரை பயன்படுத்தி வருவதால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
சேலம், பெரம்பலூர், கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கிழக்கு ராஜாபாளையம், லத்துவாடி, திட்டச்சேரி உள்ளிட்ட 5 கிராமங்களிலும் உப்புத் தன்மை வாய்ந்த நிலத்தடி நீரையே குடிநீராக கிராம மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளாக உப்புத்தன்மை வாய்ந்த நீரையே குடிநீருக்கும், சமையலுக்கும் பயன்படுத்திவந்ததால் சிறுநீரக பிரச்னையில் இருந்து பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு கிராம மக்கள் ஆளாகியுள்ளனர். இதனால், இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ள பாதிக்கப்பட்ட மக்கள், அரசு சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.