செவ்வாய், 6 மார்ச், 2018

திரிபுராவில் கம்யூனிஸ்ட் தலைவர்களின் பெயர்களை நீக்க பாஜக திட்டம்..! March 5, 2018

Image

திரிபுராவில் 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை வீழ்த்திய பாஜக, அம்மாநிலத்தில் கம்யூனிசத் தலைவர்களின் பெயர்களைக் கொண்ட முக்கிய சாலைகள் மற்றும் வீதிகளின் பெயர்களை மாற்ற முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான திரிபுராவில் 59 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலில் 43 இடங்களில் பாஜக கூட்டணியும், 16 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றிபெற்றன. இதனால் பாஜக பெரும்பான்மை தகுதியும் ஆட்சியை கைப்பற்றியது.  

இந்நிலையில் திரிபுரா தலைநகர் அகர்தலா மற்றும் அம்மாநிலத்தின் பிறபகுதிகளில் உள்ள சாலைகளின் பெயர்களை மாற்ற பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். திரிபுராவை 25 ஆண்டுகாலம் ஆட்சி செய்த கம்யூனிஸ்ட் கட்சி அம்மாநிலத்தில் உள்ள முக்கிய சாலைகளுக்கு கம்யூனிஸ்ட் தலைவர்களான கார்ல் மார்க்ஸ், ஃபெடரிக் ஏங்கல்ஸ், லெனின் போன்ற தலைவர்களின் பெயர்களை சூட்டினர். அந்த பெயர்களை நீக்கிவிட்டு பாஜகவின் தேசிய மற்றும் மாநில தலைவர்களின் பெயர்கள் சூட்டப்படும் எனவும் பாஜக தலைவர் கூறியுள்ளார்.

Related Posts: