
இலங்கையில் மட்டக்களப்பு பகுதியில் வீடுகள் மீது குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இலங்கையில் கண்டி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் முஸ்லீம்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையே இனக் கலவரம் ஏற்பட்டது. இதில் நேற்றைய தினம் தென்னகும்பர மற்றும் மெனிக்கின்ன உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லீம்களின் கடைகள் எரிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று மட்டக்களப்பு, காத்தான்குடி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளின் மீது குண்டு வீசப்பட்டதை தொடர்ந்து மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. போலீசாரின் தேடுதல் வேட்டையின் போது ஐ.எஸ்.ஐ.எஸ் ஸ்ரீலங்கா என எழுதப்பட்ட பதாகைகள் வைக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த குண்டு வீச்சு சம்பவத்தில் உண்மையிலேயே ஐ.எஸ் அமைப்பிற்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து இலங்கை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.