வியாழன், 8 மார்ச், 2018

நீதிமன்றத்துக்குள் புகுந்து நீதிபதியை கத்தியால் குத்திய இளைஞர்..! March 7, 2018

Image

பெங்களூருவில் நீதிமன்றத்தில் புகுந்து, லோக் ஆயுக்தா தலைமை நீதிபதியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் லோக் ஆயுக்தா தலைமை நீதிபதி விஸ்வநாத ஷெட்டி இன்று வழக்கம் போல் தமது அலுவலகத்தில் வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது அலுவலகத்துக்குள் நுழைந்த இளைஞர், திடீரென நீதிபதி விஸ்வநாத் ஷெட்டியை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து படுகாயம் அடைந்த நீதிபதியை அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இதற்கிடையே, நீதிபதி மீது தாக்குதல் நடத்திய இளைஞரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர் பெயர் தேஜஸ் சர்மா என்பதும், அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அரசு விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. லோக் ஆயுக்தா அலுவலகத்தில் மெட்டல் டிடெக்டர் செயல்படாததால், அலுவலகத்துக்குள் தேஜஸ் சர்மா, கத்தியை கொண்டு சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நீதிபதியை முதல்வர் சித்தராமையா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  

Related Posts: