ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்று சிறுமிகள் மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் குற்றவாளிகளை பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் பாமர் என்ற இடத்தில் ஊருக்கு ஒதுக்கு புறமாக உள்ள ஒரு மரத்தில் மூன்று சிறுமிகள் மரத்தில் துக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். உடனடியாக உடல்களை கைப்பற்றிய பாமர் மாவட்ட போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ள நிலையில் மூவரும் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளதாக பெற்றோர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப் படுத்திய போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.