திங்கள், 16 ஏப்ரல், 2018

லண்டன் வாழ் தமிழர்கள் இந்திய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்! April 16, 2018

Image

சமூகநீதிக்கு சவால்விடும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தும், இங்கிலாந்து வாழ் தமிழர்கள் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும் நீட் சட்டத்தை எதிர்த்து சட்டப் பேரவையில் ஒரு மனதாக தாக்கலான மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பறை இசை வாசித்து தங்களின் ஒருமித்த குரலை மத்திய அரசுக்கு வெளிப்படுத்தும் விதமாக தமிழர்கள் கண்டன கோஷம் எழுப்பினர். இங்கிலாந்து வாழ் தமிழர்கள், லண்டன் இந்திய தூதரகம் முன் அமைதி வழி அறப்போரை முன்னெடுத்தார்கள். தமிழ் நாட்டு சமூக நீதிக்கு சவால் விடும் ‘நீட்’ சட்ட நகலை கிழித்துக் குப்பை தொட்டியில் போட்டும், எரித்தும் போராட்டம் நடைபெற்றது. மேலும் உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து, இந்திய அரசியல் சட்ட நகலை கிழித்துக் குப்பை தொட்டியில் போட்டும், எரித்தும் போராட்டம் நடைபெற்றது.

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் முன்பு நேற்று (15-04-2018) இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமூக நீதியை சவக்குழியில் தள்ளும் கட்டாய ‘நீட்' தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது எனக் கூறி, மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழர் இசையான பறை இசையோடு எழுச்சியுடன் தங்கள் ஒருமித்த கண்டப குரலை வெளிப்படுத்தினர். மேலும் தமிழக விவசாய உரிமையான காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மதிக்காத மத்திய பாஜக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் இருந்தவர்கள் கண்டனக்குரலை எழுப்பினர்.