மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை தவறாக சித்தரித்து மீம்கள் வெளியானதால் விருதுநகரில் அவரது உறவினர் சரவணன் சுரேஷ் என்பவர் தீக்குளித்து உயிரிழந்தார்.
அதே போல் வைகோவின் நியுட்ரினோ திட்டத்திற்கு எதிரான நடைப்பயணத்தின் போது மதுரையில் தீக்குளித்த மதிமுக நிர்வாகி ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த இரண்டு வாரங்களுக்குள் நடந்த இந்த இரண்டு தீக்குளிப்பு சம்பவங்கள் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தை உலுக்கிய அரசியல் தீக்குளிப்பு சம்பவங்கள் குறித்த விவரங்களை காணலாம்..
1964 - இந்தி திணிப்பை எதிர்த்து அரியலூரை சேர்ந்த சின்னசாமி தீக்குளிப்பு
1965 - இந்தி திணிப்பு விவகாரத்தில் சென்னையில் சிவலிங்கம், அரங்கநாதன் தீக்குளித்து உயிரிழந்தனர்
1995 - இலங்கையில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதல்களை எதிர்த்து அப்துல் ரவூப் என்பவர் தீக்குளிப்பு
2009 - ஈழத்தமிழர்கள் பிரச்னைக்காக சென்னை சாஸ்திரி பவன் எதிரே முத்துகுமார் தீக்குளிப்பு
2011 - இலங்கை தமிழர்கள் விவகாரத்தால் மனவேதனை அடைந்த கிருஷ்ண மூர்த்தி தீக்குளித்து உயிரிழந்தார்
2011 - ராஜிவ் காந்தி கொலை குற்றத்திற்காக சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் விடுதலை கோரி 21 வயது செங்கொடி தீக்குளிப்பு
2013 - மதுரையில் ஈழத்தமிழர்கள் பிரச்னைக்காக ஆரோக்கியராஜ் என்பவர் தீக்குளித்து பலி
2016 - நாம் தமிழர் கட்சி நடத்திய காவிரி உரிமை மீட்புப் பேரணியில் விக்னேஷ் பாண்டியன் என்பவர் தீக்குளித்து உயிரிழப்பு
2018 - நியுட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் மதிமுக நிர்வாகி ரவி தீக்குளித்து உயிரிழந்தார்
2018 - மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை தவறாக சித்தரித்து மீம்கள் வெளியானதால் அவரது உறவினர் சரவணன் சுரேஷ் தீக்குளித்து உயிரிழப்பு