மேற்குத் தொடர்ச்சி மலையை அழித்து, நியுட்ரினோ ஆய்வுத் திட்டத்தை தொடங்கினால், கேரள பகுதி மக்களையும் ஒன்றிணைத்து பேராடுவோம் என போடி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சங்க அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்கு, போடி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சங்க அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தை எதிர்த்து, அந்த அமைப்பினர், போடி பழைய பேருந்து நிலையம் அருகே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், போடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். அந்த போரட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள், மக்களின் எதிர்ப்பையும் மீறி தேனியில் நியூட்ரினோ திட்டத்தை நிறைவேற்ற முயன்றால் கேரள மாநில மக்களையும் இணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கைவிடுத்தனர்.