வியாழன், 29 அக்டோபர், 2020

பீகார் முதல் கட்ட தேர்தலில் 53.54% வாக்குகள் பதிவு!

 


பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவில், 53.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 3 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு இடையே நடைபெறும் சட்டமன்ற தேர்தல் என்பதால் இந்த தேர்தல் நாடெங்கிலும் அதிக கவன ஈர்ப்பை பெற்றுள்ளது.  மொத்தமுள்ள 243 தொகுதிகளில் முதற்கட்டமாக 71 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 1,066 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளுடன்   வாக்குப்பதிவு நடைபெற்றது. பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்தனர்.

 

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், தனது வாக்கினை லக்கிசாராய் பகுதியிலுள்ள வாக்குசாவடிக்கு சென்று பதிவு செய்தார். பொதுவாக முதல்கட்ட வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்றது. 53 புள்ளி 54 சதவீத வாக்குகள் இன்று பதிவானது முதல் கட்ட தகவலில் தெரியவந்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.